சர்கார் பட போஸ்டர் விவகாரம் : ரூ.10 கோடி இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு

சர்கார் பட போஸ்டர் விவகாரம் தொடர்பான வழக்கில், விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்பட நான்கு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சர்கார் பட போஸ்டர் விவகாரம் : ரூ.10 கோடி இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு
x
தமிழ்நாடு புகையிலை பொருட்களுக்கு எதிரான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிரில் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில், சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் விளம்பரம் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராக சர்கார் போஸ்டர் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸிடம் இருந்து 10 கோடி இழப்பீடு பெற்று அந்த தொகையை ராயப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து, விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்பட 4 தரப்பினர் 2 வாரத்திற்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்