இளம் நடிகை பாலியல் புகார் எதிரொலி : நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மகன் ரகசிய திருமணம் நிறுத்தம்?
பதிவு : ஜூலை 08, 2018, 01:44 PM
மாற்றம் : ஜூலை 08, 2018, 01:45 PM
நடிகையின் பாலியல் புகார் காரணமாக ஊட்டியில் நடைபெறுவதாக இருந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் ரகசிய திருமணம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மிதுன் சக்ரவர்த்தியின் மகன், நடிகர் மஹா அக்‌ஷய் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக இளம் நடிகை ஒருவர் டெல்லி தலைமை மெட்ரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் மஹா அக்‌ஷய்க்கும், மும்பையை சேர்ந்த மாடல் அழகி சாய்க்கும் உதகையில் உள்ள நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு சொந்தமான நட்சத்திர விடுதியில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியானது. 

இதற்காக அங்கு தங்கி இருந்த சுற்றுலாப்பயணிகள்  வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் பாலியல் புகார் தெரிவித்த இளம் நடிகை,  டெல்லி போலீசில் ரகசிய திருமணம் தொடர்பாக புகார் அளித்ததாகவும், இதுகுறித்து மிதுன் சக்ரவர்த்தி குடும்பத்தினர் தொலைபேசியில் விசாரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து ரகசிய திருமணம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனிடையே மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி மற்றும்  மகனுக்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.