நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்று நோய்

நியுயார்க்கில் சிகிச்சை என சோனாலி தகவல்
நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்று நோய்
x
காதலர் தினம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பிரபல இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே, புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆய்வக பரிசோதனையில் உச்சகட்ட புற்று நோய் என அறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது எதிர்பாராத முடிவு எனவும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் தான் போராடி வெற்றி பெற்று வருவதாகவும் சோனாலி பிந்த்ரே குறிப்பிட்டுள்ளார். தற்போது நியுயார்க்கில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார். சோனாலி பிந்த்ரேவுக்கு தற்போது 43 வயதாகிறது.


Next Story

மேலும் செய்திகள்