சர்க்கார் (புகை)படம் இளைஞர்களை பாதிக்குமா? - பொதுமக்கள் கருத்து

நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சியுடன் வெளியான சர்க்கார் திரைப்படத்தின் First look poster சர்ச்சையாகி உள்ளது. இது குறித்து பொதுமக்களின் கருத்து என்ன...?
சர்க்கார் (புகை)படம் இளைஞர்களை பாதிக்குமா? - பொதுமக்கள் கருத்து
x
கடந்த 22 ஆம் தேதி, விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படத்தின் தலைப்பு சர்க்கார் என வெளியானது. அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும்  வெளியிடப்பட்டது. அதில் சிகரெட் புகைத்தபடி போஸ் கொடுத்திருந்தார் நடிகர் விஜய்... 

இதனால் சர்க்கார் என்ற படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும்  கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது . விஜய் புகைப்பிடிப்பது போல படத்தில் சித்தரிக்கப்படுவது, அவரது ரசிகர்களை பாதிக்கும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகிறார்கள் . குறிப்பாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அந்த கட்சியின்  இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் , கொஞ்சம் கடுமையாகவே தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். 

உண்மையில் சர்க்கார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை பாதிக்குமா என பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது... அதனை தற்போது பார்க்கலாம்....

மக்கள் சிலர், விஜய் சிகெரெட் பிடிப்பது போன்ற காட்சிகள், அவரது ரசிகர்களை பாதிக்கும் என்றே கூறி இருந்தனர். குறிப்பாக சிறுவர்களை அதிகம் ரசிகர்களாக பெற்றுள்ள விஜய் இது போன்ற செயல்களை தவிர்த்து இருக்கலாம் என்பதே  அவர்களது கருத்து .. 

 சிலர், இதனை பெரிய விஷயமாகவே கருதவில்லை.. திரைப்படத்தினை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்க வேண்டும் என்பது அவர்களது வாதம்.... 

வழக்கமான விஜய் படங்களை போலவே சர்க்காரும் படம் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்திலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது... விமர்சனங்கள் படத்தின் வெற்றியை பாதிக்குமா... அல்லது விமர்சனமே படத்திற்கு விளம்பரமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...


Next Story

மேலும் செய்திகள்