VijayBalaji | "என்ன நினைச்சிக்கிட்டு இருக்கிங்க.." - செம டோஸ் விட்ட அமைச்சர் விஜய் பாலாஜி
VijayBalaji | "என்ன நினைச்சிக்கிட்டு இருக்கிங்க.." - செம டோஸ் விட்ட அமைச்சர் விஜய் பாலாஜி #namakkal #minister #VijayBalaji #thanthitv நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பொங்கல் பண்டிகைக்காகத் தயாராகும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி மையங்களில் கைத்தறித்துறை அமைச்சர் விஜய பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆண்டிக்காடு பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடத்தில் ஆய்வு செய்த அமைச்சர், வேட்டி, சேலைகளின் நீளம், அகலம் மற்றும் நூலின் தரத்தைச் சோதனை செய்தார். அப்போது அரசு நிர்ணயித்த அளவுகளைவிடக் குறைவாகவும், தரமற்ற முறையிலும் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர், தரமற்ற வேட்டி, சேலைகளை அரசு கொள்முதல் செய்யாது என விசைத்தறி உரிமையாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்களைத் தரத்துடன் தயாரிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
