TVK vs DMK | தவெக vs திமுக.. பீர் பாட்டிலை எடுத்து.. படுபயங்கரமாக மோதல்

தவெக vs திமுக.. பீர் பாட்டிலை எடுத்து.. படுபயங்கரமாக மோதல்

#tvkvsdmk #milkshop விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பால் சொசைட்டியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பீர் பாட்டிலால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருங்காப்பூர் கிராமத்தில் தவெக கிளைக் கழகச் செயலாளர் தினகரன் நடத்தி வரும் பால் சொசைட்டிக்கு வந்த திமுக இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் அரவிந்த்ராஜ் மற்றும் அவரது நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், இரு பீர் பாட்டில்களால் தாக்க முயன்றதுடன், இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகத் தெரிகிறது. இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தையல் போடப்பட்டுள்ளது.

X