TVK | Keerthana | அமைச்சர் கீர்த்தனாவின் ஜெர்மனி மீட்டிங் - தமிழகத்துக்கு காத்திருக்கும் குட் நியூஸ்
#Keerthana | #Germany TVK | Keerthana | அமைச்சர் கீர்த்தனாவின் ஜெர்மனி மீட்டிங் - தமிழகத்துக்கு காத்திருக்கும் குட் நியூஸ் தமிழ்நாட்டில் மேம்பட்ட மின்னணு உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி சேவை நிறுவனமான ஸோல்னர் மற்றும் அவலான் டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாகிகளுடன் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை நடத்தியுள்ளார். ஜெர்மனியின் முனிச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சென்னையில் தொழில்துறை மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான உற்பத்தி வசதிகளை அமைப்பது, எதிர்கால விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டாண்மைக்காக அவலான் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு இந்தியாவின் மின்னணு உற்பத்தி மையமாக வலுப்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
