Thoothukudi | TN Police | தூத்துக்குடி - தீபாவளி அன்று இளைஞர் மீது போதை கும்பல் தாக்குதல்

Thoothukudi | TN Police | தூத்துக்குடி - தீபாவளி அன்று இளைஞர் மீது போதை கும்பல் தாக்குதல்

Thoothukudi | TN Police | தூத்துக்குடி - தீபாவளி அன்று இளைஞர் மீது போதை கும்பல் தாக்குதல் #Thoothukudi #Sterlite #TNPolice #Diwali தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தனது வலது காலை இழந்த இளைஞரை, தற்போது மதுபோதை கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ்டன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தனது ஒரு காலை இழந்து உள்ளார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாதா கோவிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, மதுபோதையில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரது வாகனத்தின் மீது மோதியதுடன், அவரைச் செங்கல்லால் தலையில் ஓங்கித் தாக்கியுள்ளனர். இதில் தலையில் எலும்பு உடைந்து ரத்தம் உறைந்த நிலையில், தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ள குடியிருப்பு பகுதியிலேயே போதை கும்பலின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகச் குற்றம்சாட்டியுள்ள இளைஞர் பிரின்ஸ்டன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

X