Thanjavur | TN Police | சாலையோர தீபாவளி வியாபாரிகளிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்- 3 பேர் கைது

சாலையோர தீபாவளி வியாபாரிகளிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்- 3 பேர் கைது

Thanjavur | TN Police | சாலையோர தீபாவளி வியாபாரிகளிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்- 3 பேர் கைது #Thanjavur #TNPolice தஞ்சையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். காந்திஜி சாலை, கலைஞர் சிலை அருகே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடம் சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பொதுமக்கள் அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த சுகுமார், ஆனந்தன், சுகுமார் ஆகிய மூவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X