Textile| `ரூ.10 ஆயிரம்’ சம்பள பாக்கிக்காக ரூ.24 கோடியை எரித்த முன்னாள் ஊழியர் - அரண்ட ஓனர்

`ரூ.10 ஆயிரம்’ சம்பள பாக்கிக்காக ரூ.24 கோடியை எரித்த முன்னாள் ஊழியர் - அரண்ட ஓனர்

#textilemarket #textile குஜராத் மாநிலம் சூரத்தில், 10 ஆயிரம் சம்பள பாக்கி வழங்காத ஆத்திரத்தில், முன்னாள் கணக்காளர் ஒருவர் 24 கோடி மதிப்பிலான துணி மற்றும் சரக்குகளுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சூரத் ஷ்யாம் சங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டின் 6-வது மாடியில், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 14 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 17 கடைகளில் இருந்த துணிகள் உள்ளிட்ட ரூ.24 கோடி மதிப்பிலான சரக்குகள் எரிந்து சேதமடைந்தன. முதலில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கருதப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட தீ விபத்து என கண்டறிந்தனர். இதையடுத்து முன்னாள் கணக்காளரான வினோத் பண்டிட் சவாலே கைது செய்யப்பட்டார். சம்பள பாக்கியை வழங்காததால் ஆத்திரமடைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com