சென்னை OMR, ECR-ல் போலீஸார் அதிரடி ரெய்டு.. மாத்திரையோடு கைதான 5 பெண்கள்

சென்னை OMR, ECR-ல் போலீஸார் அதிரடி ரெய்டு.. மாத்திரையோடு கைதான 5 பெண்கள்

#omrraid #ecrdrugsraid ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர். பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை - 5 பெண்கள் கைது சென்னை ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர். மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக போலீசார் இன்று அதிகாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில், 10 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்கள் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் சோதனை நடத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. சென்னை கண்ணகி நகர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக 5 பெண்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

X