students | bus | stunt படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் வைரலாகும் மாணவர்களின் அதிர்ச்சிகர வீடியோ!

stunt படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் வைரலாகும் மாணவர்களின் அதிர்ச்சிகர வீடியோ!

students | bus | stunt படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் வைரலாகும் மாணவர்களின் அதிர்ச்சிகர வீடியோ! #students #stunt #vellore வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், பேருந்து பற்றாக்குறை காரணமாக படிகளிலும் ஜன்னல் கம்பிகளிலும் தொங்கியபடி ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். மாலை நேரத்தில் பெரிய ஏரியூர் செல்லும் பேருந்தில் மாணவர்கள் மழையில் நனைந்தபடியே ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அனைத்துப் பேருந்துகளிலும் கதவுகளைப் பொருத்த வேண்டும் எனவும், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com