Seeman | NTK | அம்பையில் ஒட்டப்பட்ட சீமான் போஸ்டர்ஸ் - அதிரும் அரசியல் களம்
அம்பையில் ஒட்டப்பட்ட சீமான் போஸ்டர்ஸ் - அதிரும் அரசியல் களம்
#Ambasamudram | #seeman | #tnpolitics அம்பையில் ஒட்டப்பட்ட சீமான் போஸ்டர்ஸ் - அதிரும் அரசியல் களம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முன்னிறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில், “சீமானின் வெற்றி – தமிழ்நாட்டின் வெற்றி” என்றும், விவசாயி சின்னத்தில் போட்டியிடும் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இடைத்தேர்தலில் சீமான் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
