Salem | weather | சேலத்தில் திடீரென மாறிய வானிலை - கொட்டித்தீர்த்த கனமழை
சேலத்தில் திடீரென மாறிய வானிலை - கொட்டித்தீர்த்த கனமழை
#salem | #rain | #weather சேலத்தில் திடீரென மாறிய வானிலை - கொட்டித்தீர்த்த கனமழை சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகக் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, நாச்சினம்பட்டி, நடுப்பட்டி, ஜோடுகுழி உள்ளிட்ட கிராமங்களில் மதிய வேளையில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும், இந்த மழை பயிர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
