RIP Shajikumar| சினிமா பிரபலம் காலமானார்.. மலையூரு நாட்டாமை பாட்ட மறக்க முடியுமா
#ripshajikumar #malaiyurunattamaisong பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார் மலையாளத் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார், தனது 57-வது வயதில் காலமானார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நவம்பர் 10-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் திலீப் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புலிமுருகன், ஒடியன், நரசிம்மம், போக்கிரிராஜா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் நடிகர் பிரசாந்த் நடித்த பொன்னர் சங்கர், மம்பட்டியான், சாகசம் உள்ளிட்ட படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவரது மறைவு மலையாள மற்றும் தமிழ்த் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
