Rahulgandhi | "உள்ள இருந்தே தகவல் வருது.." - மொத்தமாக உடைத்து பேசிய ராகுல்
Rahulgandhi | "உள்ள இருந்தே தகவல் வருது.." - மொத்தமாக உடைத்து பேசிய ராகுல் #election #rahulgandhi #congress #thanthitv தேர்தலில் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்தாலும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் என ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ராபர்ட் பேப் உடனான கலந்துரையாடலில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தால், அந்த நிமிடமே இந்திய ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஜனநாயகக் கட்டமைப்பை உடைக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தால், ஒட்டுமொத்தத் தேர்தல் நடைமுறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவர் விளக்கியுள்ளார். தேர்தலில் தொடர்ந்து போட்டியிடுவதன் மூலமே, தேர்தல் நடைமுறைகளில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளை மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உள்ளிருந்தே பல்வேறு தகவல்கள் கிடைத்து வருவதாகவும், தற்போதைய சூழலில் தொடர்ந்து பணியாற்ற முடியாது என மூத்த அதிகாரிகளே தெரிவிப்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஜனநாயகமற்ற இந்தியாவை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
