Pudukottai Private Bus Owner| திருமணத்தில் பிரைவேட் பஸ் ஓனர் அடித்தே கொலை - மகளுக்கும் நேர்ந்த கதி
#privatebusowner #pudukottailatestnews பொன்னமராவதி அருகே தனியார் பஸ் நிறுவன உரிமையாளர் அடித்துக்கொலை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில், தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வந்த 80 வயதான சிதம்பரம், உறவினர் வீட்டு திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது திருமண மண்டபப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், வேந்தன்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன், விஜய் ஆகியோர் சிதம்பரத்தை கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிதம்பரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தாக்குதலைத் தடுக்க முயன்ற அவரது மகள் இந்துமதியும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக இருவரையும் பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
