Ooty| Water Ice| முத்துமணிகள் போல மின்னிய காட்சி.. ஊட்டியில் இயற்கை அதிசயம்
Ooty| Water Ice| முத்துமணிகள் போல மின்னிய காட்சி.. ஊட்டியில் இயற்கை அதிசயம்
#ooty #waterice நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்ப்பனிப் பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர்காலம் நிலவும் நிலையில், தீபாவளி நாட்களில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட உதகையில், இன்று வெயில் நிலவியதால் பல்வேறு பகுதிகளில் நீர்ப்பனி படர்ந்தது. எல்க் ஹில், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, குதிரைப் பந்தய மைதானம், படகு இல்லம், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் புற்கள் மீது முத்து மணிகள் போல பனித்துளிகள் காணப்பட்டன. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பனித்துளிகள் படர்ந்து ரம்மியமான காட்சியை ஏற்படுத்தின. நீர்ப்பனிப் பொழிவால் உதகையில் குளிரும் அதிகரித்துள்ளது.
