Kollimalai| ரோலர் கோஸ்டராக மாறிய வானிலை நிலவரம்.. குழம்பி போன மக்கள்
Kollimalai| ரோலர் கோஸ்டராக மாறிய வானிலை நிலவரம்.. குழம்பி போன மக்கள்
#kollimalai #namakkalrains நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த 10 நாட்களாகத் தூரல் மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சுமார் 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட கொல்லிமலையில், 40-வது கொண்டை ஊசி வளைவு முதல் சோளக்காடு, செம்மேடு, வாசலூர்பட்டி படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகப் பயணித்து வருகின்றனர்.
