Kerala | இறக்கும் முன் சொன்ன வார்த்தை.. இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய சகோதரர்கள்
இறக்கும் முன் மூதாட்டி சொன்ன வார்த்தை.. இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய சகோதரர்கள் #kerala #viralvideo #thanthitv கேரள மாநிலம் வயநாட்டில், உயிரிழந்த இந்து மூதாட்டிக்கு இந்து மத சம்பிரதாயப்படி இறுதிச் சடங்குகளைச் செய்த முஸ்லிம் சகோதரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சித்திரகிரி கிராமத்தைச் சேர்ந்த 85 வயதான கல்யாணி அம்மா, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வசித்து வந்தார். அவருக்கு பிள்ளைகளோ, நெருங்கிய உறவினர்களோ இல்லாத நிலையில், அண்டை வீட்டைச் சேர்ந்த ரசாக், சுலைமான் சகோதரர்கள் தங்களது தாயைப் போல கவனித்து வந்தனர். தனது இறுதிச் சடங்குகளையும் அவர்களே செய்ய வேண்டும் என மூதாட்டி விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது ஆசைப்படி, புரோகிதர் வழிகாட்டுதலுடன் இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்து, தகனம் செய்தனர். மதங்களைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய சகோதரர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
