kanniyakumari | தனி ஒருவனின் இரவு சம்பவம்... குமரி மக்களை நடுங்கவிடும் வீடியோ
#kanniyakumari | #theft | #viralvideo தனி ஒருவனின் இரவு சம்பவம்... குமரி மக்களை நடுங்கவிடும் வீடியோ கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு மற்றும் கோவில்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குலசேகரம் அருகே அரசு மூடு பகுதியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஷனிதா பீவியின் 5 சவரன் தங்கச் சங்கிலியை மர்மநபர் பறித்துச் சென்றார். வீட்டின் மேல்மாடி வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையன், சமையலறையில் ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு கைவரிசையைக் காட்டியதும் தெரியவந்துள்ளது. இதேபோல், பிணந்தோடு பகுதியில் உள்ள மருதின் மேல் சாஸ்தா கோவிலின் உண்டியலை உடைத்து 5 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். கடந்த வாரமும் இட்டகவேலி கோவிலில் கொள்ளை நடந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
