Heat | கொளுத்தி எடுக்கும் வெயில் - மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கொளுத்தி எடுக்கும் வெயில் - மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Heat | கொளுத்தி எடுக்கும் வெயில் - மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், மாநில அரசுகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.. அதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வேலை செய்வதைத் தவிர்த்துவிட்டு, பணி நேரத்தை மாற்றி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்துப் பணியிடங்களிலும் தடையின்றிப் போதிய குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்கள் அவ்வப்போது ஓய்வெடுக்க நிழலான இடங்கள் மற்றும் காற்றோட்டமான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது... மேலும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலக் குறைவுகளைத் தவிர்க்க, அவசர கால ஐஸ் பேக்குகள் மற்றும் முதலுதவி மருந்துகளைப் பணியிடங்களில் வைத்திருக்க வேண்டும், .... தேவைப்படும் பட்சத்தில் இரண்டு பேர் சேர்ந்து செய்யும் வகையில் பணிகளைப் பகிர்ந்து வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.... குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com