Gold Ring| கீழே கிடந்த மணி பர்ஸை ஒப்படைத்த.. 11th மாணவிக்கு தங்க மோதிரம் பரிசு

Gold Ring| கீழே கிடந்த மணி பர்ஸை ஒப்படைத்த.. 11th மாணவிக்கு தங்க மோதிரம் பரிசு

#goldring #11thstudent கீழே கிடந்த மணி பர்ஸை ஒப்படைத்த மாணவிக்கு தங்க மோதிரம் பரிசு கோவை அருகே கீழே கிடந்த மணி பர்ஸை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு, அதன் உரிமையாளர் 2 கிராம் தங்க மோதிரம் பரிசளித்துப் பாராட்டியுள்ளார். வெள்ளானப்பட்டியைச் சேர்ந்த சுபிக்ஷா, 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி காளப்பட்டி சாலையில் சென்றபோது, கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்துள்ளார். அதில் ஆதார் அட்டை, ஏடிஎம் கார்டு மற்றும் 10 ஆயிரத்து 800 ரூபாய் இருந்துள்ளது. இதையடுத்து தனது தந்தையின் உதவியுடன் வாட்ஸ்அப் குழுக்களில் தகவல் பகிர்ந்து உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். இதனைப் பாராட்டும் விதமாக, மணி பர்ஸின் உரிமையாளர் மோகன்ராஜ் மாணவியின் வீட்டிற்கே நேரில் சென்று 2 கிராம் தங்க மோதிரத்தைப் பரிசளித்துள்ளார். மாணவியின் நேர்மைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

X