Fever| விஷம் போல பரவும் காய்ச்சல்.. அனைத்து ஹாஸ்பிடல்களிலும் நிரம்பி வழிவதால் பேரதிர்ச்சி
விஷம் போல பரவும் காய்ச்சல்.. அனைத்து ஹாஸ்பிடல்களிலும் நிரம்பி வழிவதால் பேரதிர்ச்சி
#fever #tnfever #feversymptoms தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் டெங்கு காச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 பேர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 50க்கும் மேற்பட்டோருக்கு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று திரும்பும் நிலையில், டெங்கு சிகிச்சை வார்டு தயாராக உள்ளதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
