Diwali | ECR Saravanan | தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய எம்எல்ஏ ECR சரவணன்

தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய எம்எல்ஏ ECR சரவணன்

Diwali | ECR Saravanan | தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய எம்எல்ஏ ECR சரவணன் #Diwali #ECRSaravanan #TVK சென்னை புழுதிவாக்கத்தில் 500 தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்களை சோழிங்கநல்லூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் இசிஆர் சரவணன் வழங்கினார். சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புழுதிவாக்கம் 186-வது மேற்கு வட்டம் மற்றும் மடிப்பாக்கம் 187-வது வட்ட தவெக சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான இசிஆர் சரவணன், 500 தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து, தீபாவளி பரிசாக பட்டாசுப் பெட்டி, சேலை, இனிப்புகள் மற்றும் பிரியாணி ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

X