Cancer| 50 சதவீதம் வரை விலை குறைப்பு.. இதான் புதிய MRP ரேட்.. நாட்டுக்கே பெரும் நிம்மதி அறிவிப்பு

Cancer| 50 சதவீதம் வரை விலை குறைப்பு.. இதான் புதிய MRP ரேட்.. நாட்டுக்கே பெரும் நிம்மதி அறிவிப்பு

#cancer #cancerdrugsrate புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிரடியாக குறைத்துள்ளதை அடுத்து, திருத்தப்பட்ட புதிய விலை அமலுக்கு வந்துள்ளது... ​மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்த நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி, 137 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதன்படி, 85 மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் 1,364 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் திருத்தப்பட்ட விலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ​இதில் 679 பிராண்டுகளின் விலைகள் 50 சதவீதத்திற்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 96.45 சதவீதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பின் மூலம் பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 3,540 கோடி ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய MRP விலையை 'பார்மா சஹி தாம்' (Pharma Sahi Daam) செயலி அல்லது nppa.gov.in இணையதளத்தில் சரிபார்க்கலாம் என்றும், கூடுதல் விலை வசூலித்தால் 'பார்மா ஜன் சமாதான்' (Pharma Jan Samadhan) இணையதளம் மூலமாகவோ அல்லது 1800-111-255 என்ற இலவச உதவி எண் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

X