Bihar | கலெக்டரின் காலரை பிடித்து பெண்கள் வாக்குவாதம் - காலணியால் தாக்கவும் முயன்றதால் பரபரப்பு

Bihar | கலெக்டரின் காலரை பிடித்து பெண்கள் வாக்குவாதம் - காலணியால் தாக்கவும் முயன்றதால் பரபரப்பு

Bihar | கலெக்டரின் காலரை பிடித்து பெண்கள் வாக்குவாதம் - காலணியால் தாக்கவும் முயன்றதால் பரபரப்பு #bihar #womens #police பீகார் மாநிலம் மதுபனியில், போலீஸ் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியரின் சட்டைக் காலரைப் பிடித்து பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பலிராஜ்கர் கிராமத்தில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரமோகன் சிங் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அசோக் யாதவ் என்பவர் உயிரிழந்தார். மூவர் காயமடைந்தனர். இதைக் கண்டித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்தச் சென்ற மாவட்ட ஆட்சியர் ஆனந்த் சர்மாவிடம் பெண்கள் வாக்குவாதம் செய்ததுடன், அவரது சட்டைக் காலரைப் பிடித்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். மேலும், காலணியால் தாக்கவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ஆட்சியரைப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

X