Bihar Police Attack| வெறிகொண்டு அடித்து விரட்டிய மாஃபியா கும்பல் - குலைநடுங்கி ஓடிய BR போலீசார்
Bihar Police Attack| வெறிகொண்டு அடித்து விரட்டிய மாஃபியா கும்பல் - குலைநடுங்கி ஓடிய BR போலீசார்
வெறிகொண்டு அடித்து விரட்டிய மாஃபியா கும்பல் - குலைநடுங்கி ஓடிய BR போலீசார் #biharpolice #biharpoliceattack பிஹார் மாநிலம் தர்பங்காவில், சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக சோதனைக்குச் சென்ற காவல்துறையினர் மீது கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. திரிமுஹானி முஷஹரி கிராமத்தில், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட ராமேஷ்வர் சதா என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரைக் கைது செய்து, 3 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவரை மீட்க முயன்ற கும்பல், காவல்துறை வாகனம் மீது கற்களை வீசியும், கட்டைகளால் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டது. இதில் பெண் காவலர் உள்ளிட்ட போலீசார் காயமடைந்தனர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
