ADMK vs TVK | ``அந்த விஷயம் Confidential.. வெளிய சொல்ல முடியாது’’ - தவெக வழக்கறிஞர்

ADMK vs TVK | ``அந்த விஷயம் Confidential.. வெளிய சொல்ல முடியாது’’ - தவெக வழக்கறிஞர்

``அந்த விஷயம் Confidential.. வெளிய சொல்ல முடியாது’’ - தமிழகமே உற்றுநோக்கும் விவகாரத்தில் தவெக வழக்கறிஞர் தகவல் #admkvstvk #cmvijay #edappadipalanisamy அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக, சபாநாயகர் விசாரணை நடத்தினார்... அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேர் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர். சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அதிமுக தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் பங்கேற்று தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர். விசாரணைக்குப் பிறகு பேசிய இன்பதுரை, இரு தரப்பினரின் ஒப்புதலுடன் வரும் 12ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெற உள்ளதாக கூறினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் பேசுகையில், சபாநாயகர் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை அளித்துள்ளதாகவும், அடுத்த விசாரணையிலும் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பேன் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே, தவெக வழக்கறிஞர் சூரிய பிரகாசம், விசாரணையில் நடைபெற்ற விவரங்களை இப்போது வெளிப்படையாகப் பகிர்வது முறையாக இருக்காது என்றார். இதையடுத்து, தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக வரும் 12ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு இறுதிகட்ட விசாரணை நடைபெற உள்ளது.

X