டேட்டிங் App-ல் வந்த பெண்... இம்ப்ரஸ் செய்ய ஹோட்டலுக்கு அழைத்து சென்ற இளைஞருக்கு காத்திருந்த ஆப்பு
#hotel | #bihar | #datingapps டேட்டிங் App-ல் வந்த பெண்... இம்ப்ரஸ் செய்ய ஹோட்டலுக்கு அழைத்து சென்ற இளைஞருக்கு காத்திருந்த ஆப்பு டேட்டிங் செயலி மூலம் இளைஞரை கஃபேவுக்கு வரவழைத்து, 26 ஆயிரம் ரூபாய் பில் கொடுத்து மிரட்டிப் பணம் பறித்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த 23 வயது சையத் அகமது என்பவருக்கு, டிண்டர் செயலி மூலம் சான்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 1-ஆம் தேதி அவரைச் சந்தித்த அந்தப் பெண், ஹட்சன் லேனில் உள்ள கஃபேவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்த நிலையில், 26 ஆயிரம் ரூபாய்க்கான பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதைக் கேள்வி கேட்ட சையத்தை, கஃபே உரிமையாளரும் ஊழியர்களும் மிரட்டி பணம் செலுத்த வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் கஃபே உரிமையாளர் ஜாவேத் மற்றும் மேலாளர் அனுஜ் குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இளைஞரை அழைத்து வந்த பெண்ணைத் தேடி வருகின்றனர்.
