Theft | அசாமுக்கு அள்ளிச்செல்லப்பட்ட தமிழக பார் கலெக்ஷன் - ரயிலேறி இறங்கும் முன் அமுக்கிய போலீஸ்
அசாமுக்கு அள்ளிச்செல்லப்பட்ட தமிழக பார் கலெக்ஷன் - ரயிலேறி இறங்கும் முன் அமுக்கிய போலீஸ்
திருச்செங்கோட்டில் பாரில் ரூ.2.34 லட்சம் திருடியவர் ரயிலில் கைது நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் மதுபான பாரில் விற்பனையாளராக பணியாற்றிய அசாம் மாநில இளைஞர், 2 லட்சத்து 34 ஆயிரத்து 600 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது. அசாமுக்கு ரயிலில் சென்ற அவரை கவுகாத்தி அருகே போலீசார் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
