Udhayanidhi Stalin Affidavit | வெளியானது உதயநிதி சொத்து விவரங்கள்
வெளியானது உதயநிதி சொத்து விவரங்கள்
t துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்கள் வெளியீடு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அவரிடம் 12.92 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி கிருத்திகா உதயநிதியிடம் 13.25 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் இருப்பதாகத் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, உதயநிதியிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான டிஃபென்டர் கார் மற்றும் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்னோவா கார் என இரண்டு வாகனங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல உதயநிதியிடம் 7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
