TVK | Venkatramanan | தவெக பொருளாளர் வெங்கட்ரமணனின் மனைவி சொல்ல சொல்ல செய்து காட்டிய மாமியார்

தவெக பொருளாளர் வெங்கட்ரமணனின் மனைவி சொல்ல சொல்ல செய்து காட்டிய மாமியார்

``அபார்ஷன் பண்ணுனு அடிச்சி துரத்துனாரு’’ - தவெக பொருளாளர் வெங்கட்ரமணனின் மனைவி சொல்ல சொல்ல செய்து காட்டிய மாமியார்

தவெக பொருளாளர் வெங்கட்ராமன் மீது மனைவி பரபரப்பு புகார் தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளரும், சென்னை மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான வெங்கட்ரமணன் மீது, அவரது மனைவி மீனாட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடன் சேர்ந்து வாழாத வெங்கட்ரமணன், தனது பெண் குழந்தையை மட்டும் வலுக்கட்டாயமாகப் பிரித்துச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். குழந்தையைப் பார்க்கச் சென்றால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். தனது குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்து வைத்திருக்கும் வெங்கட்ரமணன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என அவர் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நேரத்தில் தவெக வேட்பாளர் மீதான இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com