TVK Campaign | Vijay | TN Election | பூம்புகார் தவெக வேட்பாளர் பொறையார் விஜயாலயன் தீவிர பிரச்சாரம்
பூம்புகார் தவெக வேட்பாளர் பொறையார் விஜயாலயன் தீவிர பிரச்சாரம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பூம்புகார் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொறையார் விஜயாலயன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொறையார் பேருந்து நிலையம், குமரன் கோவில் தெரு மற்றும் கடைவீதி பகுதிகளில் வீதி வீதியாகச் சென்ற அவர், பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கவும், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தவெக தலைவர் விஜய் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்தார். மாநில முன்னேற்றத்திற்காக மக்கள் தவெக-விற்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
