TN Election | TVK | Congress | தவெகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியினர்

தவெகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியினர்

தவெகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியினர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், மதுரை வடக்கு தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் மதுரை வடக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் பகுதி செயலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். த.வெ.க வேட்பாளர் கல்லானை முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாஸ்கர் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்லானை, காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் விஜய் அவர்களுடனான கூட்டணியையே விரும்பியதாகத் தெரிவித்தார். "மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க-வில் இணைந்தது இது முதல் புள்ளி; இதுவே வெற்றிப் புள்ளியாக மாறும்" எனக் குறிப்பிட்ட அவர், கட்சியில் இணைந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் உறுதிபடக் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com