TN Election 2026 | நெருங்கும் தமிழக தேர்தல் - பறந்த Instructions

நெருங்கும் தமிழக தேர்தல் - பறந்த Instructions

#tnelection2026 #tnelection தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 144 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய ஆட்சியர், சமூகத்தின் பலவீனமான பிரிவினர் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், புதிய வாக்குச்சாவடிகள் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com