Sengottaiyan | TVK | ஆதாரத்தை காட்டிய KAS
ஆதாரத்தை காட்டிய KAS
இழுபறிக்குப் பின் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வேட்புமனு, பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்னதாக, அவரது மனுவில் சான்றொப்பமிட்ட வழக்கறிஞர் தகுதியிழந்தவர் எனக் கூறி அதிமுக தரப்பு ஆட்சேபனை தெரிவித்தது. இதனால் மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நேரில் ஆஜராகி தனது புதுப்பிக்கப்பட்ட சான்றிதழைச் சமர்ப்பித்து விளக்கமளித்தார். வருமான வரி தொடர்பான சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவானந்தம் செங்கோட்டையனின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
