PMK | PMK Case | `மாம்பழம்’ சின்னம் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
பாமகவின் மாம்பழச் சின்னம் வழக்கில் உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவு பாமகவின் மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கில், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு பாமக நிறுவனர் ராமதசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸின் மனுவை சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, "சின்னத்தை முடக்கி பாமகவை அழிக்க முயற்சிக்கிறார்கள்" என அன்புமணி தரப்பில் வாதிடப்பட்டது. அதேநேரம், வேட்பாளர்களுக்குச் சின்னம் ஒதுக்கும் முன்பே தேர்தல் ஆணையம் இதில் முடிவெடுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு வலியுறுத்தியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராமதாஸுக்கு அறிவுறுத்தி, மனுவை முடித்து வைத்தனர்.
