NTK | நாதக வேட்பாளரை பார்த்து போலீஸ்காரர் விட்ட வார்த்தை? - அங்கேயே ரோட்டை மறித்த நாதகவினர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரேம்நாத்தை பாதுகாப்புப் பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் ஒருமையில் பேசியதாகக் கூறி அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் முடித்த இடத்தில் உடனடியாகப் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது ஏற்பட்ட வாக்குவாதம், மறியலாக மாறியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், டிஎஸ்பி சீனிவாசன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com