MK Stalin | Vijay | CM ஸ்டாலின் சரமாரி அட்டாக் - தாக்கு தாக்குனு தாக்கிய CM
CM ஸ்டாலின் சரமாரி அட்டாக் - தாக்கு தாக்குனு தாக்கிய CM
தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடிய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின் போது, புதிதாக அரசியலுக்கு வந்து நாடகமாடுபவர்கள் தேவையா என்று சிந்தித்து பாருங்கள் என, தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார். சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய முதல்வர், புதிதாக அரசியலுக்கு வந்து நாடகமாடுபவர்கள் வேண்டுமா அல்லது உங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பணியாற்றும் ஆர்.டி. சேகர் வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்யுங்கள் என கூறினார்.
