Karur DMK | "கரூரில் தியாகராஜன் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்" - உற்சாகமாகபேசிய அசோக்குமார்
"கரூரில் தியாகராஜன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார்.." - தொண்டர்களிடையே உற்சாகமாக பேசிய அசோக்குமார்
கரூரில் தியாகராஜன் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் - அசோக்குமார் கரூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே திமுக சார்பில் புதிய தேர்தல் பணிமனை திறந்து வைக்கப்பட்டது. கரூர் தொகுதித் திமுக தேர்தல் பொறுப்பாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில், திமுக வேட்பாளர் தியாகராஜன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அசோக்குமார், கரூர் வேட்பாளர் தியாகராஜனை 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம், அதற்கான உழைப்பை நீங்கள் தாருங்கள், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் எனத் தொண்டர்களிடையே உற்சாகமாகப் பேசினார். மேலும், செந்தில் பாலாஜி குறித்து எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்திகளுக்குப் பதிலடி கொடுத்த அவர், திமுக தலைமையின் உத்தரவுப்படி கோவையை வலுப்படுத்தவே கோவை தெற்கு தொகுதியில் அவர் போட்டியிடுவதாகவும் கூறினார்.
