EPS vs OPS | ``கடப்பாறை, மண்வெட்டி..’’ - பிரசாரத்தில் EPS-ஐ இறங்கி அடித்த OPS

`கடப்பாறை, மண்வெட்டி..’’ - பிரசாரத்தில் EPS-ஐ இறங்கி அடித்த OPS

ஈபிஎஸ்-ஐ சாடி போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் எடப்பாடி பழனி சாமி தலைமையிலான அதிமுக, அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே சந்திக்கும் என முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், நகரமன்றத் தலைவராக தொடங்கி முதலமைச்சர் வரை பல்வேறு பதவிகளை வகித்த தான், தேனி மாவட்டத்திற்காகச் சட்டக் கல்லூரி, கால்நடை மற்றும் பொறியியல் கல்லூரிகள் எனப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்ததாக கூறி வாக்கு சேகரித்தார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஐந்து ஆண்டு கால சாதனைகளையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய அவர் எடப்பாடி பழனி சாமி அதிமுகவை அழித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com