EPS | Campaign | "ரூ.10,000 வரவு வைக்கப்படும்.." - தீவிரமாய் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
"ரூ.10,000 வரவு வைக்கப்படும்.." - தீவிரமாய் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
"ரூ.10,000 வரவு வைக்கப்படும்.." - தீவிரமாய் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் #ranipettai #eps #aiadmk #campaign #thanthitv ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குக் கேட்டுப் பேசிய அவர், 'தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், பொதுமக்களின் வங்கி கணக்கில் தலா பத்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்' என உறுதி அளித்தார். மேலும், பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
