Election | DMK | Candidate | வில்லிவாக்கம் திமுக வேட்பாளருக்கு கிரீடம் சூடி, வீரவாள் வழங்கி வரவேற்பு
வில்லிவாக்கம் திமுக வேட்பாளருக்கு கிரீடம் சூடி, வீரவாள் வழங்கி வரவேற்பு
வில்லிவாக்கம் திமுக வேட்பாளருக்கு கிரீடம் சூடி, வீரவாள் வழங்கி வரவேற்பு
திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு, தலையில் கிரீடம் சூட்டியும், கையில் வீரவாள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் வில்லிவாக்கம் வி.பி. கோவில் தெற்கு சந்திப்புப் பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் அண்ணா தெரு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடமெல்லாம் அவருக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
