DMK | ``பாக்கி 700 ஓட்டும் உதயசூரியனுக்கு தான்’’ - பிரசாரத்தில் கலக்கும் தளபதி முருகேசன்

``பாக்கி 700 ஓட்டும் உதயசூரியனுக்கு தான்’’ - பிரசாரத்தில் கலக்கும் தளபதி முருகேசன்

``பாக்கி 700 ஓட்டும் உதயசூரியனுக்கு தான்னு பாத்தாலே தெரியுது’’ - பிரசாரத்தில் கலக்கும் தளபதி முருகேசன் #Dmk #sulur திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் தீவிர வாக்குச் சேகரிப்பு கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் கிராமம் கிராமமாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பதுவம்பள்ளி மற்றும் காடுவெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார். அப்போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்குச் சேகரிப்பின் போது மக்களிடையே பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, அப்பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com