DMK | பிரசாரம் சென்ற அமைச்சர் துரைமுருகன் - வழிநெடுகிலும் மலர் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்
பிரசாரம் சென்ற அமைச்சர் துரைமுருகன் - வழிநெடுகிலும் மலர் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்
பிரசாரம் சென்ற அமைச்சர் துரைமுருகன் - வழிநெடுகிலும் மலர் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்
காட்பாடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன், பிரம்மபுரம் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்குக் கேட்டு வந்த அவருக்கு வழிநெடுகிலும் நின்றிருந்த பெண்கள், மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்தப் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக, சுமார் 15 அடி உயரமும் 350 கிலோ எடையுமுள்ள பிரம்மாண்ட மாலையை, ராட்சத கிரேன் உதவியுடன் எடுத்து வந்த தொண்டர்கள், துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக காட்பாடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் வழங்கப்பட்ட இந்த வரவேற்பு, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
