DMK | Campaign | தொண்டர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் சி.வி.கணேசன்
தொண்டர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் சி.வி.கணேசன்
தொண்டர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் சி.வி.கணேசன்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில் கூட்டணி கட்சி தொண்டர்கள் படைசூழ அமைச்சர் சி.வி.கணேசன் வேட்புமனு தாக்கல் செய்தார். திட்டக்குடி தொகுதியில் 4வது முறையாக அமைச்சர் சி.வி.கணேசன் போட்டியிடுகிறார். ஏற்கனவே கிராமம் கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்துக்காக அவர் வாக்கு சேகரித்து வந்தார். இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியின் தொண்டர்கள் படைசூழ நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
