Arjun Sampath | தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகளுக்கு அர்ஜுன் சம்பத் வைத்த செக்

தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகளுக்கு அர்ஜுன் சம்பத் வைத்த செக்

வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதாக அர்ஜுன் சம்பத் புகார் வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரங்களுக்குத் தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்த அவர், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் மதக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு, குறிப்பிட்டக் கட்சிக்கு வாக்களிக்கக் கோருவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது எனக் குற்றம் சாட்டினார். இதுபோன்ற செயல்களை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com