Ariyalur | Seeman | கொட்டும் மழையிலும் சீமான் பிரசாரம்

கொட்டும் மழையிலும் சீமான் பிரசாரம்

அரியலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொட்டும் மழையிலும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். உலக நாடுகளின் கல்வி முறைகளை மின்னணு திரை மூலம் மக்களுக்கு விளக்கிய அவர், தமிழகத்தை கல்வியில் சிறந்த நாடாக மாற்றுவதே இலக்கு என்றார். மேலும், மூன்று வயது முதல் குழந்தைகளுக்கு முழுமையான இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் ஊதியத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்றும் சீமான் அதிரடி வாக்குறுதிகளை அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com