Annamalai | BJP | பறந்து வந்து அண்ணாமலை முகத்தில் பட்ட செல்போன்.. திடீர் பரபரப்பான பிரசாரம்

பறந்து வந்து அண்ணாமலை முகத்தில் பட்ட செல்போன்.. திடீர் பரபரப்பான பிரசாரம்

பூக்களுடன் பறந்த செல்போன் - அண்ணாமலை முகத்தில் பட்டதால் பரபரப்பு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பிரசாரத்தின் போது பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை முகத்தின் மீது, செல்போன் பறந்து வந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் திருமாறனை ஆதரித்து பேருந்து நிலையம் முன்பு அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் மலர் மாலைகள் மற்றும் பூக்களை தூவி வரவேற்றனர். அந்த நேரத்தில் பூக்களுடன் செல்போன் ஒன்று பறந்து வந்து அண்ணாமலையின் முகத்தில் பட்டு கீழே விழுந்தது. சில நொடிகள் திடுக்கிட்ட அவர், பின்னர் சிரித்த முகத்துடன் செல்போனை எடுத்து, வீசிய நபரிடம் திருப்பி ஒப்படைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com